டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டியில் பரம்பரியமான டாஸ் முறையை கைவிட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசீலித்து வருகிறது.
கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்ட முதன் முதலில் இருந்தே டாஸ் போடும் முறை இருந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியான இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடைய 1877 ஆண்டு நடைபெற்றது அந்த போட்டியில் உள்நாட்டு அணியின் கேப்டன் டாஸ் போட்டார். வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் கேப்டன் பூவா தலையா என்று கேட்பார் அப்போது இருந்து இந்த பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து வருகிறது.
டெஸ்ட் போட்டியை நடத்தும் நாடுகள் அவர்களுக்கு சாதகமாகவே பிட்ச்-ஐ தயார் செய்து விளையாடுகிறார்கள் என புகார் எழுந்துயுள்ளது . இத்தனை நாள் இதுபற்றி யாரும் வாய்திறக்காமல் இருந்த நிலையில் தற்போது இப்படி அவர்களுக்கு சாதகமாக பிட்ச்-ஐ அமைத்துக் கொள்ளவதற்கு எதிர்ப்பு தெரிவித்துயுள்ளனர்.
இதனையடுத்து இந்த டாஸ் போடும் முறையை போட்டியில் இருந்து நீக்கி விட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்து வருகிறது. வரும் 2019 ஆண்டின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புதிய நடைமுறையை செயல்படுத்தயுள்ளது. இனி வெளிநாட்டில் இருந்து வரும் அணியின் கேப்டன் பந்து வீசுவதா பேட்டிங் செய்வத என முடிவுசெய்வார்.
இதுபற்றி ஐசிசி கூட்டத்தில் முடிவுகளை இம்மாத இறுதியில் எடுக்கப்படும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னால் பயிற்சியாளர் லேமேன் இந்த டாஸ் முறைக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துருந்தார். மேலும் கிரிக்கெட் வீரர்கள் ரிக்கி பாண்டிங், மைக்கேல் ஹோல்டிங், இயான் போத்தம், ஸ்டீவ் வாக் ஆகியோரும் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவிதுயுள்ளனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்