• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாரதி நடந்த வீதியில் நான் வந்து பேசுவது காலத்தின் கட்டாயம் – கமல்

May 18, 2018 தண்டோரா குழு

பாரதி நடந்த வீதியில் நான் வந்து பேசுவது காலத்தின் கட்டாயம் என நெல்லையில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சி துவங்கியுள்ளன நடிகர் கமலஹாசன் தமிழகம் முழுவதும் மாற்றத்தை நோக்கி என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய கமல் இரண்டாவது நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் தொடங்கி திருச்செந்தூர்,காயல்பட்டினம்,ஆறுமுகநேரி, புன்னக்காயல்,ஏரல்,பண்டாரவிளை ஆகிய ஊர்களுக்கு சென்று அப்பகுதி மக்களை சந்தித்து பேசினார்.

இந்நிலையில்,சுற்றுப்பயணத்தின் மூன்றாவது நாளான இன்று கமல் நெல்லையில் மக்களை சந்தித்தார்.நெல்லையில் உள்ள டவுண் வாகையடி முனையில் மக்கள் மத்தியில் கமல் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

“வழிப்போக்கனாக பல முறை நெல்லை வந்துள்ளதேன்.பெருந்தலைவர்கள் நின்று பேசிய இடத்தில் நானும் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.பாரதி நடந்த வீதியில் பேசுவது காலத்தின் கட்டாயம். தமிழகத்தை செதுக்கும் கூர் உளி மக்கள் நீதி மய்யம்”.இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத்தொடர்ந்து ஆலங்குளம்,தென்காசி,சங்கரன்கோவில்,ராஜபாளையம்,உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களை சந்திக்க உள்ள கமல் விருதுநகரில் இன்றைய சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

மேலும் படிக்க