May 18, 2018
தண்டோரா குழு
குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குட்கா விற்பனை செய்ய சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா்,காவல் துறை டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்தி சிவகுமார் என்பவா் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தார்.இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் போது,குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்றும்,உயர் பொறுப்பில் இருந்தவர்கள் லஞ்சம் வாங்கியது தொடர்பாக சிபிஐ விசாரிக்கலாம் எனக்கூறி,சிவகுமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனா்.