• Download mobile app
25 Dec 2025, ThursdayEdition - 3606
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

May 17, 2018 தண்டோரா குழு

கோவையில் நில அளவை செய்வதற்காக லஞ்சம் வாங்கிய நில அளவையாளரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் மலைப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தை அளந்து உட்பிரிவு செய்து தனிப்பட்டா வழங்க கோரி சூலூர் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.அந்த நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வதற்காக வாரப்பட்டி பிர்கா நில அளவையாளர் கதிரேசன் ரூபாய் 30,000 லஞ்சம் கேட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து அந்த விவசாயி பத்தாயிரத்தை ஒருவாரத்திற்கு முன்னதாக கொடுத்துள்ளார். மீண்டும் கதிரேசன் பணம் கேட்கவே கோவை லஞ்ச ஓழிப்புதுறையை அணுகியுள்ளார். அதைத்தொடர்ந்து அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் இன்று அந்த விவசாயி மை தடவிய 20,000 ரூபாயை கொடுத்துள்ளார்.அப்போது அங்கு தயாராக இருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணைக்கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையிரான போலீசார் கதிரேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் படிக்க