May 17, 2018
தண்டோரா குழு
கர்நாடகா சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ்,மஜத எம்.எல்.ஏக்களின் தர்ணா போராட்டம் நிறைவுப்பெற்றது.
எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் நடக்கும் தர்ணா போராட்டத்தில் காங்கிரஸ்,மஜத எம்.எல்.ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மற்றும் மஜதவை சேர்ந்த 118 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸின் சித்தராமையா,குலாம் நபி ஆசாத் மற்றும் தேவகவுடா,குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனையடுத்து கர்நாடகா சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்களின் தர்ணா போராட்டம் நிறைவு பெற்றதையடுத்து தர்ணாவில் ஈடுபட்டிருந்த எம்.எல்.ஏக்கள் கலைந்து பேருந்துகள்,கார்களில் புறப்பட்டனர்.