May 17, 2018
தண்டோரா குழு
பி.இ ஆன்லைன் விண்ணப்பம்,ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ கலந்தாய்வு இந்த ஆண்டு ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும் என்று அறிவித்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்,நேரடி கலந்தாய்வுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.அதில் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறுவதால்,நேரம் மிச்சமாகிறது.இணையதள வசதி இல்லாத மாணவா்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்கலைக்கழகம் சார்பில் கலந்தாய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து,நீதிபதிகள் நேரடி விண்ணப்ப நடைமுறையை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.