May 17, 2018
தண்டோரா குழு
லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா கர்நாடகாவின் 23வது முதல்ராக பதவி ஏற்றார்.
கர்நாடகாவில் சட்டபேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும்,மஜத 38 இடங்களை கைப்பற்றியது.இதனால் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் யார் ஆட்சி அமைப்பது என்ற குழப்பமாக சூழல் இருந்தது. இதற்கிடையில்,காங்கிரஸ் – மஜத கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். அதைப்போல் பாஜகவும் உரிமை கோரியது.
இதனால் ஆளுநர் ஆட்சி அமைக்க யாருக்கு அழைப்பு விடுக்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில்,நேற்று பாஜக முதல்வர் வேட்பாளரான எடியூரப்பாவிற்கு ஆளுநர் நேற்று அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து,லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா கர்நாடகாவின் 23வது முதல்ராக பதவி ஏற்றார். ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் அவர் பதவியேற்றார்.
முன்னதாக பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு செல்லும் முன்பு, வழியில் பெங்களூர் ராதாகிருஷ்ணன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
எடியூரப்பா பதவியேற்பு விழாவை முன்னிட்டு அவர் செல்லும் வழி மற்றும் ஆளுநர் மாளிகை முன்பு பாஜகவினர் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். எடியூராப்பா கர்நாடகா முதல்வராக பதவியேற்றதை அவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
மேலும், எடியூரப்பா பதவியேற்றதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு கர்நாடக போலீசாருக்கு இன்று விடுப்பு மறுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.