• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தந்தையை இழந்த இந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர் !

May 16, 2018 தண்டோரா குழு

கேரளாவில் தந்தை இழந்த மாணவியின் உயர் கல்விக்கு பணமின்றி தவித்த தாய்க்கு முஸ்லிம் சமூகத்தினர் கல்விச் செலவு அனைத்தையும் ஏற்றுக்கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் அருகே,புழக்கத்திரி அருகே கொட்டுவாட் வடக்கத்தோடி காலணியைச் சேர்ந்தவர் வி.டி. ரமேஷ். இவரின் மனைவி சாந்தா. மகள் சத்யவாணி மங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரமேஷ் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் சாந்தாவின் குடும்பம் வறுமையிலும் வீழ்ந்தது. குடும்பத்தைத் தொடர்ந்து நடத்துவதில் பல்வேறு சிக்கல்களையும் சாந்தா சந்தித்தார். அதிலும் மகளின் படிப்புச் செலவுக்கென பணம் தேவைப்பட்ட போது உறவினர்களிடமும் நண்பர்களிடமும் மகளின் கல்விச்செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் யாரும் சத்யாவாணியின் கல்விச் செலவுக்கு உதவ முன்வரவில்லை.

இதையடுத்து அங்குள்ள புழக்கத்திரி நகரில் இருக்கும் முஸ்லிம் சமூகத்தின் ஜமாத்துக்குச் சென்று சாந்தா தனது நிலையை எடுத்துக்கூறியுள்ளார். இதைகேட்ட முஸ்லிம் சமூகத்தினர் சந்தாவுக்கும் அவரின் மகள் சத்யவாணிக்கும் உதவ முடிவு செய்தனர். இதையடுத்து அவர்களது சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பெரும் பணக்காரர்களிடம் நன்கொடையாக பணம் பெற்றனர்.

பின்னர்,முஸ்லிம் மஹால் குழுவின் தலைவர் என்.முகமது முசலிர், காதிப் அஸ்ரப் பைசி, செயலாளர் கே.கே.மொய்தீன், பொருளாளர் கே.ஹம்சா ஆகியோர் வாணியின் இல்லத்துக்குச் சென்று 1 லட்சம் பணத்தை சத்யவாணியிடம் கொடுத்துள்ளனர். மேலும் சத்யவாணியின் கல்விச்செலவு அனைத்தையும் ஏற்பதாக உறுதியளித்துள்ளனர்.இதுமட்டுமின்றி சாந்தாவுக்கு ஒரு வேலைக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.மேலும்,சாந்தாவின் கணவர் வாங்கிய கடனையும் அடைத்து அடமானம் வைத்திருந்த நிலப் பத்திரங்களையும் மீட்டு சாந்தாவிடம் முஸ்லிம் சமூகத்தினர் அளித்தனர்.

இந்து மாணவியின் கல்விச் செலவையும் அவர்கள் குடும்பத்தாரின் கடனையும் அடைத்த முஸ்லிம் சமூகத்தினரின் செயல் நெகிழ்ச்சியடைய வைத்துயுள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க