May 16, 2018
தண்டோரா குழு
மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்சார கட்டணத்தை பார்த்த ஜெகநாத் ஷெல்கி என்பவர் அதிர்ச்சியடைந்து தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் ஹவுரங்காபாத்தின் புந்த்லி நகரில் உள்ள பாரத் நகரை சேர்ந்தவர் ஜெகநாத் ஷெல்கி. அந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர் அந்த கடையின் மின்சார கட்டணத்தை ஒவ்வொரு முறையும் கட்டி வந்தார். வழக்கமாக ஆயிரம் ரூபாய்க்குள் தான் மின் கட்டணம் அவருக்கு வரும். இந்நிலையில், இந்த மாதம் மின் கட்டணத்தை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில், இம்மாத மின் கட்டணம் ரூ. 8 லட்சம் 64 ஆயிரம் ஆகா வந்துள்ளது. ஜெகநாத் மின் கட்டணத்தை பார்த்ததில் இருந்து மிகவும் கவலையில் இருந்துள்ளார். எனினும், மின்சார வாரியத்துக்கு பல முறை சென்று முறையிட்டுள்ளார். ஆனால், அதில் எந்த பலனும் இல்லை. அவர்கள் அந்த தொகையை சீக்கிரம் கட்டும்படி கூறியுள்ளனர்.
இதனால் மன வேதனையில் இருந்த அவர் அவரது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் அவரது வீட்டில் இருந்த கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அந்த கடித்ததில் மின்சார கட்டணம் அதிகமாக வந்த காரணத்தினால் தான் நான் தற்கொலை செய்துகொண்டேன் என்று எழுதியிருந்தார்.
இதையடுத்து போலீசார் விசரணை நடத்திய விசாரணையில் மின்சார அலுவலக ஊழியர் ஒரு புள்ளியை மாற்றி போட்டதால் வந்த விபரிதம் தான் இது என்பது தெரியவந்தது. இதனால் ஜெகநாத் ஷெல்கி குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.