May 16, 2018
தண்டோரா குழு
மஜத தலைவர் குமாரசாமி கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து . காங்கிரஸ், மஜத சேர்ந்த 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க குமாரசாமி உரிமை கோரினார்.
கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்கவுள்ளனர் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ், மஜத பலத்தை காட்ட எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பு முடிவு செய்தனர். ஆளுநரின் முன் அணிவகுப்பு நடத்த இருகட்சிகளும் அனுமதி கேட்டிருந்தன. ஆனால், காங்கிரஸ், மஜத கோரிக்கையை கர்நாடக ஆளுநர் வஜூபாய் நிராகரித்தார். பின்னர், காங்கிரஸ், மஜத சேர்ந்த 10 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மஜத தலைவர் குமாரசாமி கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து. காங்கிரஸ், மஜத சேர்ந்த 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க குமாரசாமி உரிமை கோரினார். அவருடன் காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, மூத்த தலைவர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோரும் சென்றனர். இதற்கிடையில், கர்நாடக ஆளுநர் மாளிகை முன் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்கள் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.