May 16, 2018
தண்டோரா குழு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மேம்பாலம் இடிந்து 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி பகுதியில் உள்ள கண்டோன்மன்ட் என்னும் பகுதியில் புதிதாக ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது . இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலார்கள் வேலை பார்த்து வந்தனர்.
இவ்வாறு இருக்கும் நிலையில் செவ்வாய்கிழமை மாலை 6 மணியளவில் அந்த பாலம் இடிந்து விழுந்தது. அந்த பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த ஆட்டோ பஸ் கார் மற்றும் இரு சக்கர வாகனகள் சிக்கிக்கொண்டன. இந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்த விசயத்தை அறிந்த தீயணைப்பு விரர்கள் மற்றும் மீட்பு படையினர் அங்கே வந்து பாலம் அடியில் சிக்கிகொண்ட பலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சேதம் அடைந்த வாகனங்களை அங்கு இருந்து அகற்றினர்.
இந்த சம்பவத்திற்கு உத்தரப்பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் துணை முதல்வர் கே.பி மௌரியா மற்றும் அமைச்சர் நீல்கந்த் திவாரி ஆகியோரை மீட்புப்பணியை தீவிரப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார் .
பிரதமர் மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து மோடியின் வீட்டு பகுதியில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விபதிற்காக தலைமை திட்ட மேலாளர் ஹெச்.சி. திவாரி, திட்ட மேலாளர் கே.ஆர். சூடான், பொறியாளர் ராஜேஷ் சிங் மற்றும் லால் சந்த் ஆகியோரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் கே பி மௌரியா கூறினார்.