May 16, 2018
தண்டோரா குழு
பாஜக உடன் கூட்டணி கிடையாது என மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 224 சட்டசபைத் தொகுதிக்களுக்கான வாக்குப்பதிவு கடந்த 12-ம் தேதி நடைபெற்றது.இதில்பா.ஜ.கா 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும்,மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது.சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
பா.ஜ.க 104 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 112 தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை.இதனால் பா.ஜ.க அங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த சூழலை பயன்படுத்திய காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் அரசு அமைக்க முடிவு செய்துள்ளது.
மேலும்,கர்நாடகத்தில் ஆட்சியமைத்திட பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது.இது தொடர்பாக எடியூரப்பா,கர்நாடகத்தில் பாஜக 100 சதவீதம் ஆட்சியமைக்கும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மஜத சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த குமாரசாமி, ஏற்கெனவே பேசி முடிவு செய்தது போல் காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.