May 15, 2018
தண்டோரா குழு
கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து முதலமைச்சர் சித்தராமையாதனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
224 சட்டசபைத் தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு 12-ம் தேதி நடைபெற்றது.தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.இதற்கிடையே காங்கிரஸ் 78 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் 78 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் அக்கட்சியால் ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. இதனையடுத்து முதல்வர் சித்தராமையா, கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.