May 15, 2018
தண்டோரா குழு
விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரிக்கும் படம் சண்டக்கோழி-2.லிங்குசாமி இயக்கும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் ராஜ்கிரன்,வரலட்சுமி சரத்குமார் சதீஷ்,சூரி, ஹரீஷ் அப்பானி சரத்,ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.இந்நிலையில் செப்டம்பர் 18 அன்று விநாயகர் சதுர்த்தி அன்று படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக விஷால் தெரிவித்துள்ளார்.