May 15, 2018
தண்டோரா குழு
காவிரிக்காக கமல் கூட்டும் கூட்டத்தில் நல்லக்கண்ணு பங்கேற்கவில்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதற்காக அனைத்து விவசாய அமைப்புகளுடன் நேற்று ஆலோசனை நடத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்ற கூட்டம் மே 19- ம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.
இந்நிலையில்,காவிரிக்காக கமல் கூட்டும் கூட்டத்தில் நல்லக்கண்ணு பங்கேற்கவில்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில்,சென்னையில் நடைபெற இருக்கும் இக்கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்திருந்த கமல்ஹாசன் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்தார்.