May 14, 2018
தண்டோரா குழு
லக்னோவில் ரிசர்வ் போலீஸ் கான்ஸ்டபிள் அனுப்பிய விடுப்பு விண்ணப்பம் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பணிபுரிந்து வரும் ரிசர்வ் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீண்ட காலமாக விடுப்பு எடுக்காமல் இருந்துள்ளார்.இதனால் கோபமடைந்த மனைவி 4 மாதங்களுக்கு ஒருமுறை கூட மனைவியை பார்க்க வரவில்லை என்றால் எதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் மேலும் என்னை பார்க்க வரவில்லை என்றால் உங்களை வீட்டு பிரிந்து சென்று விடுவேன் என்றும் கூறியுள்ளார்.
இதனால் ரிசர்வ் போலீஸ் கான்ஸ்டபிள் அவர் ஒரு மாதத்திற்கு முன்பு விடுப்பு கேட்டு மேலதிகாரியிடன் விண்ணப்பித்துள்ளார்.அந்த விண்ணப்பத்தில் நான் 10 நாட்கள் விடுப்பு பெற்று வீட்டிற்கு செல்லவில்லை என்றால் என் மனைவி ஏன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாள் ஆதலால் எனக்கு விடுப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்வதாக போலீஸ் கான்ஸ்டபிள் மேலதிகாரியிடம் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிகாரி ராணா மஹேந்திரா பிரதாப்,ரிசர்வ் போலீஸ் கான்ஸ்டபிள் விடுப்பிற்கான காரணத்தின் தீவிரத்தை உணர்ந்த உடனடியான விடுப்பு அனுமதி வழங்கினார்.இந்நிலையில் போலீஸ் கான்ஸ்டபிளின் எழுதிய விடுப்பு விண்ணப்பம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.