May 14, 2018
தண்டோரா குழு
திண்டுக்கலில் குளத்தில் மூழ்கிய நண்பனை காப்பாற்றச் சென்ற கல்லூரி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்
திண்டுக்கல் மாவட்டம் சோலைஹால் சேர்ந்த ரித்திக் சகாயம் மற்றும் நண்பர்கள் சேர்ந்து திண்டுக்கல் அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் கால் கழுவ சென்றனர் அப்போது எதிர்பாரத விதமாக ரித்திக்கின் நண்பன் வின்னரசு கால் தவறி குளத்தில் விழுந்தார்.
தனது நண்பன் தவறி தண்ணிரில் விழுந்து உயிருக்கு போராடுவதை பார்த்த ரித்திக் சற்றும் யோசிக்காமல் குளத்தில் குதித்து வின்னரசு வை காப்பாற்றி மேலே தள்ளி விட்டுவிட்டு ரித்திக் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மேலே இருந்த மற்ற நண்பர்கள் கூச்சலிட்டதை அங்கு இருந்தவர்கள் பார்த்து குளத்தில் குதித்து ரித்திக் சகாயத்தின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
நண்பனின் உயிரை காப்பாற்ற தன் உயிரை கொடுத்த ரித்திக் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஆழ்த்தியுள்ளது.