May 14, 2018
தண்டோரா குழு
பிரதமர் மோடி மிரட்டும் தோணியில் பேசி வருகிறார்.அவரை எச்சரித்து வையுங்கள் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதி உள்ளார்.
இது தொடர்பாக மன்மோகன்சிங் குடியரசுத்தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
கடந்த காலங்களில் இந்திய பிரதமர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் நல்லிணக்கத்தையும்,நல்லொழுக்கத்தையும் பேணி வந்துள்ளனர்.ஆனால் தற்போது ஜனநாயக ஆட்சியில் அரசின் தலைமை இடத்தில் உள்ள பிரதமர்,முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் தலைவர்களையும்,உறுப்பினர்களையும் மிரட்டும் விதத்திலும்,எச்சரிக்கும் வகையிலும் பேசி வருகிறார்.இழிவுபடுத்தும் விதமாகவும்,பொது அமைதியை சீர்குலைக்கும் விதமான வார்த்தைகளை பிரதமர் மோடி பயன்படுத்துகிறார்.
தேர்தல் பிரச்சாரத்திலும் அரசியல் ஆதாயத்திற்காக அச்சுறுத்தும் மொழியில் பிரதமர் பேசியதை எதிர்பார்க்கவில்லை.எனவே காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராகவோ அல்லது மற்ற கட்சி நபர்களுக்கு எதிராகவோ இது போன்ற தேவையற்ற,மிரட்டும் தொனியிலான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று பிரதமரை,குடியரசுத் தலைவர் எச்சரிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குடிரயசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மன்மோகன்சிங் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம்,முகுல்வாஸ்னிக்,அசோக் கெலாட் உள்ளிட்டோரும் கையொப்பமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.