• Download mobile app
19 Jan 2026, MondayEdition - 3631
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐதராபாத்தை சதத்தால் அடித்து ஓடவிட்ட ராயுடு – சென்னை அபார வெற்றி

May 14, 2018 tamilsamayam.com

ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் ராயுடுவின் அபாரமான சதத்தால் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணிக்கு சென்னை அணியின் பவுலிங்கால் மிரட்டினர். தொடக்கத்தில் தடுமாறினாலும்,இறுதியில் சிறப்பாக விளையாடிய ஐதராபாத் அணியின் தவான் 79, வில்லியம்சன் 51,ஹூடா 21 அடிக்க 179 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணிக்கு வாட்சன், ராயுடு மிக அருமையான தொடக்கம் கொடுத்தனர்.வாட்சன் 35 பந்தில் 57 ரன் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார். பின் வந்த ரெய்னா 2 ரன்னில் அவுட்டானார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ராயுடு 62 பந்தில் 7 சிக்ஸர், 7 பவுண்டரி விளாசி 100* ரன்கள் அடித்தார்.ராயுடு 100, தோனி 20 ரன் அடிக்க சென்னை 19 ஓவரில் 2 விக்கெட் மட்டும் இழந்து 180 ரன்கள் எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் படிக்க