• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நூற்றாண்டுகளில் பெய்யாத கோடை மழை பெய்துள்ளது

May 12, 2018 தண்டோரா குழு

கோவையில் நூற்றாண்டுகளில் பெய்யாத கோடை மழை கோவையில் நூற்றாண்டுகளில் பெய்யாத கோடை மழை தாக வேளாண் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

கோவையில் நூறாண்டுகளில் பெய்யாத அளவுக்கு கோடை மழை பெய்திருப்பது கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உள்ள காலநிலை ஆராய்ச்சி மைய ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

கோவையில் கடந்த இரு மாதங்களாக கோடை வெயிலை உணரமுடியாத அளவுக்கு கோடை மழை, குளிர்வித்து வருகிறது.கோவையில் கடந்த 11 நாட்களில் பெய்த மழை,இந்த நூற்றாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பதிவாகி உள்ளதாக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.

கோடை காலங்களில் மொத்தம் 130 மில்லி மீட்டர் அளவுக்கு வழக்கமாக மழை பெய்யும், இந்தாண்டு வட மாநிலங்களில் ஏற்பட்ட காற்றழுத்த வேறுபாடு மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு,கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் வழக்கத்திற்கும் அதிகமாக அனைத்து இடங்களிலும் கோடை மழை வெளுத்து வாங்குவதாக காலநிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை 268 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது.இந்த மழை அளவு கடந்த நூராண்டுகளில பெய்த கோடை மழையளவில் அதிகபட்சம் என தெரிவித்துள்ளனர்.

மேலும்,கோடை மழை இம்மாத இறுதி வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனவே மழை நீரை வீணாக்காமல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க