May 11, 2018
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்றிருந்தபோது அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார்.
அப்போது அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பேசப்பட்டது.பின்னர் துபாய் போலீசார் விசாரணை நடத்தி,உடலை ஒப்படைத்தனர்.ஆனால் நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்,அவரது மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இயக்குனர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில்,அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது,துபாய் போலீசார் நடத்திய விசாரணையில் சந்தேகப்படும் அம்சம் எதுவும் இல்லை என்று கூறியதை சுட்டிக்காட்டி மனுதாரரின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.