May 11, 2018
தண்டோரா குழு
பேராசிரியை நிர்மலாதேவியின் ஜாமின் மனுவை ஸ்ரீவில்லிபுதூர் குடும்பநல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டதாக கைது செய்யப்பட்டார்.இது தொடா்பாக தமிழக அரசு சார்பில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது.அதைபோல் ஆளுநா் பன்வாரிலால் புரோகித் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான குழு ஒன்றையும் நியமித்து விசாரணைகள் நடைபெற்று வந்தன.இதற்கிடையில்,ஆளுநா் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவின் விசாரணை நிறைவு பெற்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில்,ஜாமீன் கோரி நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிர்மலா தேவியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்திரவிட்டது.