• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேரளாவில் சட்டப்படி நடைபெற்ற முதல் திருநங்கை- திருநம்பி திருமணம்!

May 10, 2018 தண்டோரா குழு

கேரளாவில் முதல் முறையாக சட்டப்படி இசான் ஷான் மற்றும் சூர்யா ஆகியோருக்கு முதல் திருநங்கை திருமணம் நடைபெற்றது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் இஷான். பெண்ணாக பிறந்த இவர் தனக்குள் இருந்த ஆண் உணர்வால் திருநம்பியாக மாறினார். அதைபோல், தனக்குள் ஏற்பட்ட பெண் உணர்வால் திருநங்கையாக மாறியவர்கேரளாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் துணை நடிகையாக இருக்கும் சூர்யா வினோத்.இவர் ஏற்கனவே திருநங்கை என்னும் மூன்றாம் பாலினத்தில் தனி வாக்காளர் அடையாள அட்டை பெற்று அனைவரது கவனத்தினையும் ஈர்த்தவர்.

மூன்றாம் பாலினத்தை சேர்த்தவர்கள் என்றாலே ஒதுக்கி வைத்து பார்க்கும் இந்த சமூகத்தில் இஷானும்- சூர்யாவும் ஜாதி மதங்களை கடந்து, காதலித்து இன்று சட்டப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.இது கேரளாவில் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ள முதல் திருநங்கை- திருநம்பி திருமணமாகும். முன்னதாக இந்த ஜோடிக்கு Special Marriage Act சட்டத்தின் கீழ் சட்டரீதியாக திருமணம் செய்துக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்த ஜோடி கேரளாவின் முதல் மாற்று பாலின தம்பதியராகும் பெயரினை பெற்றுள்ளனர்.

எங்கள் திருமணத்திற்கு எந்த பிரச்னையும் இல்லை. இருவர் வீட்டின் சம்மதம் மற்றும் உறவினர்கள் என அனைவரின் மத்தியிலும் தான் எங்கள் திருமணம் நடந்து முடிந்துள்ளது. எங்கள் இருவரின் குடும்பத்தினரும் எங்களை புரிந்துக் கொண்டனர். அதனால் திருமணத்திலும் சிக்கல் இல்லை என இஷானும் சூர்யாவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க