• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காய்கறி விலை வீழ்ச்சி!

May 9, 2018 தண்டோரா குழு

கோவையில் வரத்து அதிகரிப்பால் அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமான அளவுக்கு குறைந்து உள்ளது.

கோவைக்கு உள்ளூர் மற்றும் கர்நாடகா,மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தினமும் லாரிகளில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.கடந்த இரண்டு மாதங்களாக தேவைக்கு ஏற்றால் போல வரத்து இல்லாத காரணத்தால் காய்கறி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறி விலை தற்போது குறைந்துள்ளது.குறிப்பாக கிலோ 60 வரை விற்பனையான கத்திரிக்காய்,தற்போது 20 ரூபாய் என குறைந்து உள்ளது.இதேபோல் சின்ன வெங்காயம் 30 ரூபாயும், பல்லாரி 25 ரூபாய் என விலை குறைந்து உள்ளது.பீன்ஸ்,கேரட் விளையும் 20 ரூபாய்க்கு குறைந்து உள்ளது.இந்த விலைக்குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.ஆனால் வியாபாரிகள் கவலையடைந்து உள்ளனர்.

மேலும் படிக்க