• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒவ்வொரு பந்தையும் நான் எப்படி வீச வேண்டும் என்பதில்தான் முழுக்கவனும் செலுத்துவேன் – புவனேஷ் குமார்

May 8, 2018 தண்டோரா குழு

ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் அணி பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு அணி ஹைதராபாத் அணியை 20 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது.147 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை மட்டுமே எடுத்தது.

இப்போட்டியின் கடைசி ஓவரை புவனேஸ்குமார் வீசினார்.அந்த ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது.நேர்த்தியான யார்க்கர் பந்துகளால் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த புவனேஷ்குமார்,கடைசி பந்தில் கிராண்ட்ஹோமை க்ளீன் போல்டாக்கினார்.புவனேஸ்வர் குமாரின் நேர்த்தியான பந்து வீச்சால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 5 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது .

இதுகுறித்து புவனேஸ்வர் குமார் கூறுகையில்,

“நான் நெருக்கடியை பற்றி அதிக அளவில் சிந்திப்பேன் என்று சொல்லமாட்டேன். ஒவ்வொரு பந்தையும் நான் எப்படி வீச வேண்டும் என்பதில்தான் முழுக்கவனும் செலுத்துவேன்.நான் எப்போதும் வலைப்பயிற்சியில் யார்க்கர் பந்து வீசுவதில் கவனம் செலுத்துவேன். நீங்கள் வலைப்பயிற்சியில் என்ன பயிற்சி எடுக்கிறீர்களோ, அது ஆடுகளத்தில் வெளிப்படும்”என்றார்.

மேலும் படிக்க