May 8, 2018
தண்டோரா குழு
தலைநகரமான டெல்லியில் நேற்று இரவு சுமார் 11.20 மணியளவில் புழுதி புயல் பயங்கரமாக தாக்கியது.இந்த புயலானது மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிலும் தாக்கியுள்ளது.இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த புழுதி புயலால் ரோஹ்தக்,ஜஜார்,குருகுரம்,பாக்தாத்,மீரட், சண்டிகர்,அரியானா மற்றும் காஜியாபாத் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் சேதமடைந்துள்ளது.மேலும்,அடுத்த 48 மணி நேரத்திற்கும் டெல்லி அரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களுக்கும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புழுதி புயல் தாக்கும் என்பதால் இன்று டெல்லி,குருக்ரம், நொய்டா, கஜியாபாத் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.