• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் ப‌ன்‌றி கா‌ய்‌ச்ச‌ல் தடு‌ப்பூ‌சி

May 7, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து தயார் நிலையில் இருப்பதாகவும், தேவைப்படும் நபர்கள் தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ளலாம் எனவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து கோவை மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.ஆஸ்துமா, கல்லீரல், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோயாளிகள், 6 மாதம் முதல் எட்டு வயது வரையுள்ள குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசிகளை போட்டுக் கொள்ளலாம் என கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது கோவையில் பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், தேவைப்படுவோர் தாமதிக்காமல் தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க