• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் சல்மான்கான் மேல்முறையீடு விசாரணை ஜூலை 17ம் தேதி ஒத்திவைப்பு

May 7, 2018 தண்டோரா குழு

மான் வேட்டையாடிய வழக்கில் விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து நடிகர் சல்மான் கான் தொடர்ந்த வழக்கு, ஜூலை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 1998ம் ஆண்டு, 2 மான்களை வேட்டையாடிய வழக்கில், ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த சில வாரங்களுக்கு முன் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஜோத்பூர் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடிகர் சல்மான்கான் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக இன்று காலை, நீதிமன்றத்தில் நடிகர் சல்மான்கான் ஆஜரானார்.அப்போது வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

மேலும் படிக்க