May 5, 2018
தண்டோரா குழு
தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கம் கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கதினை அங்கீகாரம் செய்தமைக்கு அதன் தலைவர் தெய்வ சிகாமணி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் தெய்வ சிகாமணி,
கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் பல்வேறு வகையான போட்டிகளை நடத்தி வந்துள்ளோம். அதன் பலனாக தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கம் கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தை அங்கீகாரம் செய்துள்ளது. இதற்காக தமிழ்நாடு மூத்தோர் தடகள சங்கதின் தலைவர் தேவராம், செயலாளர் பழனிசாமி பொருளாளர் ராதாமணி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த வருடம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போட்டியில் 426 தடகள வீரர்கள் கலந்து கொண்டதாகவும் இதில் 170 பேர் தேர்வு செய்யப்பட்டு கரூரில் நடைபெற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர். அதில் 36 பேர் தங்க பதக்கமும் 42 பேர் வெள்ளி பதக்கமும் 27 பேர் வெண்கல பதக்கமும் பெற்றனர். அதை போல் இந்த வருடம் ஜூன் 17ம் தேதி தடகள போட்டி நடைபெறவுள்ளது. இதில் 30 வயதிற்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம் போட்டிகள் காலை 8 முதல் மாலை 6 வரை நடைபெறுகிறது. இதில் 52 வகையான போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதில் பங்குபெற விருப்பமுள்ளோர் சங்கத்தில் நேரடியாக தொடர்பு கொள்ளவும் எனக் கூறினார்.
இந்த சந்திப்பின்போது செயலாளர் உன்னி கிருஷ்ணன், பொருளாளர் குப்புசாமி, துணைத் தலைவர் கோபாலசாமி, ஆலோசகர் ஜோசப், ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.