• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குட்கா விவகாரம்:கோவையில் கைது செய்யப்பட்ட திமுகவினர் ஜாமீனில் விடுவிப்பு

May 5, 2018 தண்டோரா குழு

கோவை கண்ணம்பாளையம் குட்கா தொழிற்சாலை விவகாரத்தில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுகவினர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் குட்கா தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக வெளிப்படையான விசாரணையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த பொய் வழக்கை போட்ட காவல்துறையை கண்டித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவையில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், நா.கார்த்திக் எம்எல்ஏ மற்றும் தங்கராஜ் மீது போடப்பட்ட பொய் வழக்கு தொடர்பான மனு மீதான விசாரணை மே 15ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.அதேசமயம், பொய் வழக்கில் சிறை சென்ற திமுகவினர் 7 பேருக்கு, சூலூர் நீதிமன்ற நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்திரவிட்டது.இந்த உத்தரவையடுத்து, கோவை மத்திய சிறையிலிருந்து பொய் வழக்கில் சிறை சென்ற கண்ணம்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் தளபதி முருகேசன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், வார்டு செயலாளர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் கபிலன், இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க