May 4, 2018
தண்டோரா குழு
நீட் தேர்வு எழுத கேரளாவுக்கு வரும் தமிழக மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்திரவிட்டுள்ளார்.
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை 6ம் தேதி நடக்கிறது.தமிழகத்தில் மதுரை,நெல்லை,திருச்சி,கோவை,நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மட்டுமே இந்த தேர்வுக்கான மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்குக் கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா பகுதியிலும் பல்வேறு மாணவ மாணவிகளுக்கு ராஜஸ்தானிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில்,நீட் தேர்வு எழுத கேரளா வரும் தமிழக மாணவர்களுக்கு உதவ முக்கிய பேருந்து நிலையங்கள்,ரயில் நிலையங்களில் உதவி மையங்களை அமைக்க மாவட்ட ஆட்சியர்கள்,காவல் கண்காணிப்பாளர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்திரவிட்டுள்ளார்.