May 4, 2018
தண்டோரா குழு
கரடியுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்தவர் கரடி தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் பிரபு பத்தாரா என்ற வேன் ஓட்டுனர் திருமண நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினரை காட்டுப்பகுதி வழியாக வேனில் வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.அப்போது,வழியில் காயம் அடைந்த நிலையில்,கரடி ஒன்று படுத்திருந்தது.கரடியை பார்த்த பிரபு அதனுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு அருகே நின்று செல்ஃபி எடுத்தார்.
சற்றும் எதிர்பாராத விதமாக பிரபு கால் தவறி கரடி மீது விழுந்துள்ளார்.அப்போது,அந்த கரடி அவரை கடுமையாக தாக்கியது.எனினும்,அவர் கரடியிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தார்.ஆனால் அந்த கரடி அவரை பலமாக தாக்கி கிழே தள்ளியது.இதையடுத்து,அவருடன் வந்தவர்கள் கரடியை விரட்டி அடிக்க முயற்சி செய்தனர்.எனினும்,பிரபு சம்பவ இடத்திலேயே பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.