May 4, 2018
தண்டோரா குழு
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு வருகின்ற மே 6ம் தேதி நடைபெறவுள்ளது.சமீபத்தில் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,தமிழக மாணவர்களுக்கு கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ள மையங்களுக்கு பதில் தமிழத்திலேயே மையம் ஒதுக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
மேலும், வேறு மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வெழுத தமிழக மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் தமிழ் மாணவர்களுக்கு உதவுதற்கு தமிழ் நெஞ்சங்கள் முன் வந்துள்ளனர்.
தமிழக அரசு:“நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்களுடன் செல்லும் ஒருவருக்கு, இரண்டாம் வகுப்பு இலவச ரயில் டிக்கெட் வழங்கப்படும்” என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் செலவுக்காக 1,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது.
ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம்:ராஜஸ்தான் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழக மாணவ மாணவிகள் அங்கு சென்றதும் அவர்களுக்குத் தேவையான வாகன உதவி, தங்குவதற்கான வசதி, உணவு, தேர்வு நடைபெறும் இடத்தை அடைவதற்கான உதவி அனைத்தையும் செய்ய முன்வந்துள்ளனர்.ராஜஸ்தான் செல்லும் மாணவ/மாணவிகள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு உதவியைப் பெறலாம்.
திரு. முருகானந்தம் (9790783187)
திருமதி. சௌந்தரவல்லி (8696922117)
திரு.பாரதி (7357023549)
நடிகர் அருள்நிதி:நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு உதவி செய்ய தயார் என நடிகர் அருள்நிதி தெரிவித்துள்ளார். மாணவர்கள் உதவிக்கு 9841777077 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு நடிகர் அருள்நிதி கூறியுள்ளார்.
நடிகர் பிரசன்னா:நடிகர் பிரசன்னா தனது டிவிட்டர் பக்கத்தில், “நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்குச் செல்லும் கிராமப்புற மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேருக்கு என்னால் உதவ முடியும். உதவி வேண்டுவோர் உங்களின் ஹால் டிக்கெட் போன்ற விவரங்கள் மற்றும் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் விவரங்களை எனக்கு அனுப்பவும். நான் உங்களின் பயண டிக்கெட்டை பதிவு செய்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.
டி.டிவி தினகரன்:கேரள மாநிலத்தில் நீட் தேர்வு மையம் ஒதுக்கபட்டுள்ள தமிழக மாணவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தங்கும் வசதியும், தேர்வு மையத்துக்கு வழிகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிமுன் அன்சாரி:நீட் தேர்வுக்காக வெளி மாநிலங்களுக்குச் செல்ல பொருளாதார ரீதியாகச் சிரமப்படும் நாகை தொகுதிக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் உடனடியாக என்னை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்குத் தேவைப்படும் பொருளாதார உதவிகள், நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என நாகை தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
சீமான்:இராஜஸ்தானில் ‘நீட்’ தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு வாகனவசதி தங்குமிட வசதி செய்து கொடுத்து தேர்வு மையம் வரை அழைத்துச் சென்று உதவ “நாம் தமிழர் டெல்லி” தம்பிகள் தயாராக உள்ளார்கள். எந்த உதவியாயினும் உடனடியாகத் தொடர்புகொள்ளுங்கள்.
சக்தி – 9717974572
ஜெகதீஸ்வரன் – 8800690700
நடிகை கஸ்தூரி:NEET பாலக்காடு,எர்ணாகுளம் சென்டர்களில் நீட் தேர்வு எழுத வேண்டிய பிள்ளைகளுக்கு தங்கும் இடம்,உணவு ஏற்பாடு செய்து தருகிறேன்.உங்கள் ஹால் டிக்கெட்,பயண விபரம் whatsapp இல் அனுப்பவும்.தொடர்புக்கு- Kasthuri,jai-9789895953.