May 3, 2018
தண்டோரா குழு
பள்ளிப் பாடப்புத்தகங்களில் மரம் வளர்ப்பு குறித்து பாடங்களை சேர்க்க கோரி,நடிகர் விவேக் தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவரான நடிகர் விவேக் மரம் வளர்ப்பு, இயற்கை சார்ந்த விஷயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டும் வருகிறார்.
இந்நிலையில்,நடிகர் விவேக் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் மனுவை அளிக்க,தலைமைச் செயலகம் வந்தார்.ஆனால்,சந்திக்க இயலாததால் செங்கோட்டையன் சார்பில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி விவேக்கிடம் மனுவைப் பெற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய விவேக்,பாடத்திட்டத்தில் புவி வெப்பமயமாதலின் தீவிரம்,மரம் வளர்ப்பின் அவசியம் குறித்த பாடங்களை வைக்க வேண்டுமெனவும் கூறினார்.