May 3, 2018
தண்டோரா குழு
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ளது.இந்த அக்னி நட்சத்திரம் (04.05.2018) முதல் (28.05.2018) வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் என்பது சூரியன் கிருத்திகா நட்சத்திரத்தை வழியாக கடந்து செல்லும் காலமாகும்.சூரியன் கடந்து செல்லும் போது,பரணி நட்சத்திரத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டில், கிருத்திகா நட்சிதிரத்தின் அனைத்து காலாண்டுகளும், ரோஹிணி நட்சத்திரத்தின் முதல் காலாண்டும் அக்னி நட்சத்திரமாக கருதப்படுகிறது.
அக்னி நட்சத்திரம் வரும் முன்பே வெயில்தாக்கம் அதிகம் உள்ள இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் நாளை முதல் தொடங்குவதால் வெயில் தாக்கம் இன்னும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.