May 2, 2018
தண்டோரா குழு
சிம் கார்டு வாங்க ஆதார் கட்டாயமில்லை என்று மத்திய தொலை தொடர்புத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்திருந்தது.இந்நிலையில் அப்படி இணைக்க தேவையில்லை என்று மத்திய தொலைத்தொடர்பு துறை ஆணை பிறப்பித்தது.
மேலும்,மொபைல் போன் சிம் கார்டு வாங்க ஆதார் அட்டை வழங்க வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும்,ஆதார் கார்டு அளிக்காவிட்டாலும் சிம் கார்டு வழங்கலாம் என்று தெரிவித்துள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றை வைத்து இனி சிம் வாங்கலாம் என்றும்,ஆதார் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளது.