May 2, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மேலும் 2 வார அவகாசம் கேட்டிருந்தது. இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று இடைக்கால மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
காவிரி விவகாரத்தில் வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள கால அவகாசம் நாளையோடு முடியவுள்ள நிலையில், தற்போது காவிரி விவகாரத்தில் மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. வரைவு திட்டம் தொடர்பான மனுவோடு, மத்திய அரசின் இடைக்கால மனுவும் நாளை விசாரிக்கப்படும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுத்துள்ளது என்பதை அறிய நான்கு மாநில அரசுகளும் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளது.