April 30, 2018
தண்டோரா குழு
கோவையில் சிட்டுக்குருவியை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் வாழுவு இடத்தை அதிகரிக்க கோவை மாநகராட்சி முழுவதிலும் சிட்டுக்குருவி கூடுகள் வைக்கப்பட்டுள்ளது.
அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க கோவை மாநகராட்சியில் மக்களின் பங்களிப்போடு எந்ததெந்த இடத்தில் சிட்டுக்குருவி காணப்படுகிறது என ஆய்வு மேற்கொண்டு அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட சிட்டுக்குருவி கூடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, கோவையில் 3000 கூடுகள் வைக்க திட்டமிட்டு சிட்டுக்குருவிக்கு கூடுகள் அமைத்து கொடுக்கும் வகையிலான இத்திட்டத்தை மாநகராட்சி உடன் இணைத்து தனியார் தொண்டு நிறுவனமும் சேர்ந்து இன்று துவங்கயுள்ளனர்.
கோவையில் இன்று மாநகராட்சி அலுவலகம் மற்றும் அணைத்து பேருந்து நிலையங்களிலும் சிட்டுக்குருவி கூடுகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த கூடுகளை பாதுகாக்கவும் அதை கண்காணிக்கவும் ஆராய்ச்சி மாணவர்கள் ஈடுபட உள்ளனர் .
அதுமட்டுமின்றி பொதுமக்கள் சிட்டுக்குருவிகள் அதிகம் வாழும் இடம் தெரிந்தால் இலவச கூடுகளை வாங்கி வைக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தொடர்புக்கு : 9943320303