April 28, 2018
தண்டோரா குழு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வட்டாட்சியர் பணிக்கு தேர்வெழுத கழுதைக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காஷ்மீர் மாநிலத்தில் நாளை வட்டாட்சியர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாநில அரசுப்பணிகள் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது. இதில் ஸ்ரீநகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுத கழுதைக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
அரக்கு நிறக் கழுதை என பொருள் படும் கச்சுர் கார் என்ற பெயரில் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு, அதில் கழுதையின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காஷ்மீர் மாநிலத்தில் மாடு ஒன்றுக்கு தேர்வெழுத ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.