• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அட்வென்சர் விளையாட்டுகள், யானை சவாரி என புத்துயிர் பெரும் கோவை குற்றாலம் !

April 27, 2018 தண்டோரா குழு

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவையின் சுற்றுலாத்தளங்களில் முக்கியான ஒன்றாக கருதப்படுவது மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கோவை குற்றாலம் அருவியாகும். கண்ணை கவர்ந்து ஆர்பரித்து கொட்டும் அருவியில் ஆனந்த குளியல் என்றாலே அது ஒரு தனி சுகம் தான். தற்போது வாட்டி எடுக்கும் கோடை வெளியிலின் சூட்டை தணிக்க கோவை மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கோவை குற்றாலம் அருவிக்கு வந்து செல்கின்றனர்.அருவியில் குளிக்க பெரியவர்களுக்கு 50 ரூபாயும் குழந்தைகளுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கடந்த 2007 ம் ஆண்டு சாடிவயல் சோதனை சாவடி அருகில் மர வடிவிலான 2 வீடுகளும் வட்ட வடிவிலான 2 வீடுகளும் வனத்துறை சார்பில் அமைக்கபட்டது. இங்கு ஒரு நாள் தங்குவதற்கு 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலாபயணிகளின் வசதிக்காக ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யும் முறையும் விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளது.

இது சுற்றுலாயணிகளை கவருவதாக இருந்தாலும் மறுபுறம் இங்கு தங்க வரும் சுற்றுலாப்பயணிகள் உணவுக்கான ஏற்படுகளை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அதுமட்டுமன்றி அருவியில் குளிப்பதை தவிர வேறு ஒரு பொழுதுபோக்கு அம்சங்கள் ஏதும் இங்கு இல்லை. இதனால் பலரும் இங்கு தங்க யோசித்து வருகின்றனர்.

எனவே பரளிகாடு சுற்றுலாத்தளம் போல் சுற்றுலா பயணிகளுக்கு இங்கும் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட வன அலுவலர் சதீஷிடம் கேட்டபோது,

பொதுவாக கோவை குற்றாலம் வனவிலங்குகள் நடமாட்டம் நிறைந்த பகுதியாகும். அதனால் தான் அருவிக்கு குளிக்க செல்பவர்கள் கூட வனத்துறை வாகனத்தில் அழைத்துத் செல்லப்படுகிறார்கள் . இங்கு தங்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்படுகின்றன.ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டதும்.பரளிக்காடு போன்றே தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு இங்கும் பழங்குடியினரால் சமைக்கப்பட்ட இயற்கை உணவுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யபடும். அதைபோல், அட்வென்சர் விளையாட்டுகள், யானை சவாரி, பறவை காணுதல் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் செய்வதற்கான பணிகளும் நடந்து வருகிறது எனக் கூறினார்.

கல்வி நிலையங்கள்,தொழிற்சாலைகள் நிறைந்த கோவை மக்களுக்கு பொழுதுபோக்கு இடமும் இயற்கை அழகை காண இருக்கும் ஒரே இடம் கோவை குற்றாலம் தான். ஆகையால் இயற்கை அழகை காண பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் விரைவில் கொண்டு வரப்பட்டால் அங்கு வாழும் பழங்குடி இன மக்களும் வாழ்வாதாரமாகவும் கோவை மக்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.

மேலும் படிக்க