• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்துக்களை பேக் செய்து அனுப்பகூடிய ஏஜென்சியாக திராவிடர்கள் செய்யபடுகிறார்கள் – எச்.ராஜா

April 27, 2018 தண்டோரா குழு

இந்துவைக் பேக் செய்து அனுப்பகூடிய ஏஜென்சியாகா திராவிடர்கள் செயல்படுகிறார்கள் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

கோவையில் பாஜக மாவட்ட தலைவர் நந்தகுமார் இல்லத்திற்கு வருகை தந்தபாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

நீதிமன்ற தீர்ப்பில் 5 பக்கத்தில் குறிப்பிட்டது போல 9 பேர் கொண்ட குழுவைசம்மந்தப்பட மாநிலங்கள் ஒரு பிரதிநிதியைக் நியமிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.அதில் கேரளாவும், கர்நாடகவும் இன்னும் அவர்கள் தரப்பில் இருந்து பிரதிநிதியைக் நியமிக்கவில்லை என்பதால், அவர்களைக் நியமிக்கும் வரை மேலும் இரண்டு வார கால அவகாசத்தை மத்திய அரசு கேட்டிருக்கலாம். அப்படியும் அவர்கள் நியமிக்கபடவில்லை என்றால் நீதிமன்ற நியமிக்க சொல்லி உத்தரவு பிறப்பிக்கும்.அப்போது மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கும். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தெளிவான முடிவைக் எடுக்கும்.கர்நாடகதேர்தலுக்கும்,காவிரிக்கும் சம்பந்தமில்லை. கர்நாடகவில் காங்கிரஸ் வர வேண்டும் என்பதற்காக திமுக தற்போது அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், கோவையில் மாவட்ட தலைவர் நந்தகுமார் இல்லத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. ஐபிஎல் சென்னையில் நடந்த போது தேசவிரோதிகள் காவல்துறையைக் தாக்கியுள்ளது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தமிழகம் மத்திய அரசால் வஞ்சிக்கபடுவதாக இங்குள்ள திராவிடர்கள் சித்தரிப்பதாகவும்,தமிழகத்தில் வன்முறையைக் ஏற்படுத்த தலைமை ஏற்கும் கட்சியாக எதிர்கட்சி செயல்பட்டு கொண்டு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மக்களை பாதிக்கும் பிரச்சினைக்கு இங்கு போராடுவதில்லை மத்திய அரசுக்கும் ,பக்கத்து மாநிலத்திற்க்கு ,இலங்கைக்கு எதிராக தான் இங்கு போராட்டம் நடத்தப்படுவதாகவும் குறிப்பாக தற்போது இந்துக்களுக்கு எதிராக பேசுவது பேஷனாகிவிட்டது எனவும் அவர் கூறினார்.
மேலும், தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை மோசமாக செயல்பட்டு வருவதாகவும்.இந்துவைக் பேக் செய்து அனுப்பகூடிய ஏஜென்சியாகா திராவிடர்கள் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.சைபர் சைக்கோக்கள் என்று அமைச்சர் ஜெயகுமார் சொன்னதற்கெல்லாம் தான் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் குட்கா விவாகரத்தில் குற்றம்சாட்டப்பவர்களிடத்தில் சிபிஐ நேர்மையாக விசாரணை செய்யும் எனவும் அதில் யாரும் தலையிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

எஸ்.வி சேகர் மீது பாஜக நடவடிக்கை எடுக்கும் என தமிழிசை கூறியும் இதுவரைக் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு,பதிலளித்த எச்.ராஜா, பத்திரிக்கையாளர்கள் பற்றி தவறுதலாக சமூகவலைதளங்களில் எஸ்.வி சேகர் பதிவிட்டது தவறானது..எனவும்அவர் மீது சிலர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள் அது பற்றி நீதிமன்றம் முடிவு எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க