April 27, 2018
தண்டோரா குழு
காவிரி தொடர்பான செயல் திட்டத்தை சமர்பிக்க மேலும் 2 வார கால அவகாசம் தேவை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 6 வார காலத்துக்குள் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க உத்தரவிட்டது.எனினும்,காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.ஆனால் 6 வார காலம் முடிவடைந்த பின் உத்தரவில் குறிப்பிட்டிருப்பது ஸ்கீமா? மேலாண்மை வாரியமா? என உச்சநீதிமன்றத்தில் மன்றத்தில் மத்திய அரசு விளக்கம் கேட்டு மனுத்தாக்கல் செய்தது. அதைப்போல் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இம்மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,மே 3-ந் தேதிக்குள் காவிரி நதிநீர் பங்கீட்டு திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில்,தற்போது இது தொடர்பாக பதில் மனுத்தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசத்தை உச்சநீதிமன்றத்திடம் கேட்டிருக்கிறது மத்திய அரசு.மேலும்,உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி,நதிநீர் பங்கீட்டு வரைவு அறிக்கை இன்னமும் தயாராகவில்லை.அதனால் கால அவகாசம் கேட்கிறோம் என தலைமை நீதிபதியிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு மேலும் 2 வாரம் அவகாசம் கேட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அரசின் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.