• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஃபிக்கி ஃப்ளோ அமைப்பின் புதிய தலைவராக ஜெயந்தி மனோகர் தேர்வு

April 27, 2018 தண்டோரா குழு

கோவை ஃபிக்கி ஃப்ளோ அமைப்பின் 2018-2019 ஆம் ஆண்டின் புதிய தலைவராக ஜெயந்தி மனோகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஃபிக்கி ஃப்ளோ அமைப்பின் புதிய தலைவர் பதவியேற்பு விழா நேற்று (26.04.18) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரம்மா குமாரிகள் சகோதரி கோதை பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

ஃபிக்கி ஃப்ளோ அமைப்பின் புதிய தலைவர் ஜெயந்தி மனோகர் கூறுகையில்,

“ஃப்ளோ கோயம்புத்தூர் அமைப்பு பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக சமூகத்தில் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இது தொழில்முனைவோர் ஒரு புதிய வியாபாரத்தை உருவாக்குவதற்கான மார்க்கெட்டிங் நுட்பங்களில் ஆலோசனை மற்றும் பயிற்சி அளிக்க ஸ்வயம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மற்றும் வழிகாட்டு பாகத்தை உருவாக்கியுள்ளது.

மேலும்,பிரதம மந்திரியின் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரிக்கிறோம்.இத்திட்டத்தின் மூலம் ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளோம்.பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் பெற அவர்கள் தங்கள் பொருட்களை விற்க இலவச விற்பனையகங்களை வழங்குகிறோம்.

ஃப்ளோ அமைப்பின் குறிக்கோள் பொருளாதரா வளர்ச்சி பாதையில் பெண்கள் தங்கள் திறமைகளை,திறன்களை,அனுபவங்கள் மற்றும் ஆற்றல்களை பொருளாதராத்தின் அனைத்து துறைகள் மற்றும் நிலைகளிலும் வெளிப்படுத்த ஊக்குவிக்கவும்,உதவி செய்வதும் ஆகும்”.என்று கூறினார்.

மேலும் படிக்க