April 26, 2018
தண்டோரா குழு
நீட் தேர்வுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியது பற்றி சிபிஎஸ்இ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 6ம் தேதி நடைபெறுகிறது.இதற்காக மாணவர்கள் பலர் ஆன்-லைனில் விண்ணப்பித்து வருகின்றனர்.இந்நிலையில்,காஞ்சிபுரம் திருப்போரூரை சேர்ந்த மாணவி ஸ்ரீவிஜி (17), நேற்று முன்தினம் நீட் தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார்.
அப்போது தேர்வு மையம் குறித்த விவரங்களுக்கு மாணவி ஸ்ரீவிஜி சென்னை,காஞ்சிபுரம்,நெல்லை ஆகிய இடங்களை தேர்வு செய்திருந்தார்.ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் முடிந்து பதிவேற்றம் செய்த பிறகு அவருக்கு ஹால்டிக்கெட் வந்தது.அதில் அவருக்கு கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் ஒதுக்கக்கோரி காளிமுத்து மைலவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இதில் நீட் தேர்வுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியது பற்றி சிபிஎஸ்இ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.