April 25, 2018
தண்டோரா குழு
சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள்,தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழக காங்கிரஸ்தலைவர் திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார்.இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.மேலும் காவிரி மேலாண்மைவாரியம் அமைக்கும் வரை கருப்பு சட்டை அணியப்போவதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்துகுமார் தெரிவித்துள்ளார்.