April 24, 2018
தண்டோரா குழு
ஆஸ்திரேலியாவில் முள் புதரில் சிக்கிக் கொண்ட 3 வயது சிறுமியை இரவு முழுவதும் அருகே இருந்து பாதுகாத்த நாய்க்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்தவர் 3 வயதான ஆரோரா என்ற பெண் குழந்தை.சரியாக காது கேட்காத,கண் குறைபாடு கொண்ட இக்குழந்தை வீட்டின் வெளியே விளையாட சென்றுள்ளது.அப்போது அரோராவின் வீட்டு நாயான மேக்ஸ் அந்த குழந்தையை பின் தொடா்ந்து உடன் சென்றுள்ளது.இதற்கிடையில்,விளையாட சென்ற குழந்தை வெகுநேரம் ஆகியும் குழந்தை வீடு திரும்பாததால் அவளது தாத்தா,பாட்டி குழந்தையை தேட ஆரம்பித்தனர்.
இந்நிலையில் வீட்டில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டா் தூரத்தில் உள்ள மலைப்பகுதியில் இருந்து ஆரோரா கத்தியாக கூறி அவரின் பாட்டி மலையை பகுதியை நோக்கி சென்றுள்ளார்.அப்போது, மலையின் உச்சியை அடைந்தவுடன் அங்கு வந்த மேக்ஸ் நாய்,ஆரோரா இருக்கும் இடத்திற்கு பாட்டியை அழைத்து சென்றுள்ளது.
வெள்ளி இரவு காணாமல் போன குழந்தையை சனிக்கிழமை காலை கண்டுபிடிக்கும் வரை சுமார் 16 மணி நேரம்,அந்த நாய் குழந்தையை பாதுகாத்துள்ளது.அன்று இரவு வெப்ப நிலை 10 டிகிரி வரை குறைந்தபோதும் கூட,அரோராவை விட்டு நகராமல் மேக்ஸ் அங்கேயே இருந்ததாக உறவினா்கள் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில்,குழந்தையை தேடுவதற்கான பணியில் அக்கம்பக்கத்தினர்,தன்னார்வலர்ககள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள் அனைவரும் மேக்ஸின் வீரச்செயலை கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.இதையடுத்து,காவல் துறையினா் மேக்ஸுக்கு ‘கவுரவ போலீஸ் நாய்’ என்று பட்டம் வழங்கியுள்ளது.