April 23, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கோவை காந்திபுரத்தில் இன்று(ஏப் 23)மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், இதற்கு முயற்சி மேற்கொள்ளாத மத்திய – மாநில அரசுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.இதேபோல்,கோவை காந்திபுரத்தில்,டாக்டர் நஞ்சாப்பா சாலையிலிருந்து துவங்கிய மனித சங்கிலி, லாலா கார்னர், கிராஸ்கட் சாலை,100 அடி சாலை, வடகோவை மேம்பாலம்,டாடாபாத் வரை ஏர் களப்பையுடன் திமுகவினர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
திமுக மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி,புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ்மணி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.இராமசந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் மயூரா ஜெயக்குமார்,காங்கிரஸ் புறநகர் மாவட்ட தலைவர் விஎம்சி.மனோகரன்,கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம்,ஆதி தமிழர் பேரவை நிறுவனர் அதியமான்,தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல தலைவர் சுசி.கலையரசன் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.