• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கழுத்தில் கம்பிகளை மாட்டிக் கொண்டு சுற்றிந்தவரை பழைய நிலைக்கு மாற்றிய ஈரநெஞ்சம்

April 23, 2018 தண்டோரா குழு

ஈரநெஞ்சம் அறக்கட்டளை மற்றும் Y’S MEN’S CLUB இணைந்து கோவை சாலை பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியவர்கள்,நோய்வாய்பட்டவர்கள் மற்றும் மனநலம் பாதித்து சுற்றித்திரியும் ஆதரவற்றவர்கள் என சுமார் 25-க்கும் மேற்பட்டோரை மீட்டு அவர்களுக்கு முடி திருத்தம் செய்து,நகங்களை வெட்டிவிட்டு, குளிக்க வைத்து,மாற்று ஆடை வழங்கியது.

அப்போது,கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அந்தோணி(40)என்ற மனநிலை பாதித்த நபர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.அவர் கழுத்தில் இரும்பு கம்பிகளையும், வளையங்களை மாட்டிக்கொண்டு அது கழுத்தை இறுக்கி காயங்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தார்.அப்போது அவரை மீட்ட ஈரநெஞ்சம் அமைப்பினர் அவர் கழுத்தில் இருக்கும் இரும்பு கம்பிகளை மிகுந்த சிரமத்திற்கு இடையில் அகற்றி,உடனடியாக அரசு மருத்துவமனையில் கழுத்தில் இருக்கும் காயங்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் மயக்கம் தெளிந்தவுடன் கோவை புலியகுளம் பகுதியில் தனது உறவினர்கள் இருப்பதை கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து,ஈரநெஞ்சம் அமைப்பினர் அவரை அவர் வீட்டிற்கு பத்திரமாக அழைத்து சென்றனர்.அப்போது அந்தோணியை கண்ட அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

இது குறித்து அந்தோணியின் தம்பி ஜோசப் கூறும்போது,

“என்னுடைய அண்ணன் நீண்ட நாட்களாக மனநிலை பாதித்திருந்தார்.சாலையில் சுற்றி திரிவார்,எங்களை கண்டால் ஓடிவிடுவார்.கழுத்தில் கம்பிகளை மாட்டிக் கொண்டு தெரு தெருவாக சுற்றித்திரிவதை பார்க்கும் போது மனது வலிக்கும்.எப்படியாவது அவரை காப்பாற்ற முடியாதா என்று தவித்துக் கொண்டு இருந்தோம்,இன்று அந்தோணியை பழைய நிலையில் எங்கள் வீட்டிற்குள் இருப்பதை காணும் பொழுது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது என ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தனது நன்றியினை தெரிவித்தார்”.

மேலும் படிக்க