April 23, 2018
தண்டோரா குழு
கோவையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இன்று(ஏப் 23)விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக,கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபேரணி துவங்கியது.இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் வட்டார போக்குவரத்து ஊழியர்கள்,வாகன விற்பனை முகவர்கள்,காவல்துறையினர், போக்குவரத்து துறை பயிற்சி மாணவர்கள்,தன்னார்வலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பாலசுந்தரம் சாலையில் துவங்கிய பேரணி,காந்திபுரம் வழியாக வ.உ.சி மைதானம் வரை சென்றடைந்தது.சாலை விதிகளை மதிப்போம்,தலை கவசம் அணிய வேண்டும்,குடிபோதையில் வாகனத்தை இயக்கக்கூடாது,உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு பேரணி குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் கூறுகையில்,
2016 ஆம் ஆண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியால் 2017ல் தமிழகத்தில்8சதவிகிதம் சாலை விபத்துகள் குறைந்துள்ளதாகவும், விபத்தில்லா மாநிலத்தை உருவாக்க விழிப்புணர்வு அவசியம் என தெரிவித்தார்.மேலும் 29 ஆம் தேதி வரை தினம்தோறும் இரு சக்கர வாகன பேரணி,கலை நிகழ்ச்சி போன்று பல்வேறு வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.