April 21, 2018
தண்டோரா குழு
பேட்டி கொடுக்கும் நடிகர்களுக்கு தொலைக்காட்சி நிறுவனங்கள் பணம் கொடுக்க வேண்டும் என சென்னையில் தயாரிப்பாளர் சங்கம்,நடிகர் சங்கம் இடையேயான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர்களின் சம்பளத்தில் வெளிப்படைத்தன்மை உள்பட படத்தயாரிப்பில் செலவுகளைக் குறைப்பது குறித்து நடிகர் சங்கத்தினர் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் சங்கத்தின் தலைவர் நாசர்,பொதுச் செயலாளர் விஷால்,பொருளாளர் கார்த்தி,நடிகர்கள் சிம்பு,அரவிந்த்சாமி,சுகாசினி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நாசர்,
படத்தயாரிப்பில் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை குறைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.மேலும், பேட்டி கொடுக்கும் நடிகர்களுக்கு தொலைக்காட்சி நிறுவனங்கள் பணம் கொடுக்க வேண்டும் என சென்னையில் தயாரிப்பாளர் சங்கம்,நடிகர் சங்கம் இடையேயான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.